கண்ணி லான்சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத் தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் பண்ணி லாவிய பாடலந் தொடைநின் பாத பங்கயம் பதிவுறப் புனைவோர் உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே
கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல் கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன் எண்ணி லாஇடை யூறடுத் ததனால் இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென் உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய் உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண் தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின் சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே