கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும் அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும் துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத் துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே
கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக் கருணாநி தியைக்க றைமிடற் றானை ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே