கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன் கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன் பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்
கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில் ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார் போமிடத்திற் போவேன் புலர்ந்து