கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால் நண்ணுதல் பொருட்டோ ர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத் தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே