கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர் தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார் துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென் பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே டீயஉம -------------------------------------------------------------------------------- இங்கித மாலை கலைமகள் வாழ்த்து நேரிசை வெண்பா
கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர் தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும் பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ