கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில் கடியனேன் காமமே கலந்து வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே