Vallalar.Net
Vallalar.Net

கருணைப்

பாடல் எண் :3624
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும் 
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே 
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற் 
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே
பாடல் எண் :4989
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே 
கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே 
தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே 
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே  எனக்கும் உனக்கும்