கருணைமா நிதியே என்னிரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ தருணவான் அமுதே என்பெருந் தாயே தந்தையே தந்தையே என்கோ தெருள்நிறை மதியே என்குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே