கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க் காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல் ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன் இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ணீராய் அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான் அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே