கருமை யாம்அகங் காரமர்க் கடவா கடைய னேஉனைக் கலந்தத னாலே அருமை யாகநாம் பாடினோம் கல்வி அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம் இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண் ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே
கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப் பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார் தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ