கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார் அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும் ஐய நீர்உம தருள்எனக் களிக்க இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ
கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார் இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே