கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல் காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில் மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள் மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே -------------------------------------------------------------------------------- வரம்பில் வியப்பு எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்