கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன் நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர் செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர் சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும் அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பிரியேன் என்றல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்