கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக் காண்பதே அருமைஅருமை கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக் கருணையால் அவர்வலியவந் திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி தெழுந்துபோய்த் தொழுதுதங்கட் கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல் ஏமாந்தி ருப்பர்இவர்தாம் பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற் புல்லாதி உணும்உயிர்களும் போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம் புறச்சுவர் எனப்புகலலாம் வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா மணிஉலக நாதவள்ளல் மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே