கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார் பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார் இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே
கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப் பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ