கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங் கன்மவுட லில்பருவம்நேர் கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக் கடல்நீர்கொ லோகபடமோ உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட ஒருவிலோ நீர்க்குமிழியோ உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ உன்றும்அறி யேன் இதனைநான் பற்றுறுதி யாக்கொண்டு வனிதையர்கண் வலையினில் பட்டுமதி கெட்டுழன்றே பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப் பற்றணுவும் உற்றறிகிலேன் சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே