பாடல் எண் :4481
கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்
அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்() சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்
() அணிகிளர் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க
--------------------------------------------------------------------------------
வருவார் அழைத்துவாடி
சிந்து
பல்லவி