கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க் கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத் தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப் பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும் நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே