கலைவளர் கலையே கலையினுட் கலையே கலைஎலாம் தரும்ஒரு கருவே நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும் நித்திய வானமே ஞான மலைவளர் மருந்தே மருந்துறு பலனே மாபலம் தருகின்ற வாழ்வே புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு பொதுநடம் புரிகின்ற பொருளே
கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட கருணையங் கண்ணது ஞான நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற நின்றது நிறைபெருஞ் சோதி மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே வயங்குவ தின்பமே மயமாய்த் தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே தனித்தெனக் கினித்ததோர் கனியே