காட்சியே காண்பதுவே ஞேய மேஉள் கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும் மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல சூட்சியே() சூட்சியெலாம் கடந்து நின்ற துரியமே துரியமுடிச் சோதித் தேவே