காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம் வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே
காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில் குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன் வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி