காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத் தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார் வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார் போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே