கான மேஉழல் விலங்கினிற் கடையேன் காம மாதிகள் களைகணிற் பிடித்தேன் மான மேலிடச் சாதியே மதமே வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன் இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன் ஞான மேவுதற் கென்செயக் கடவேன் நாய காஎனை நயந்துகொண் டருளே