காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும் கனலோப முழுமுடனும் கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட கண்கெட்ட ஆங்காரியும் ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன் றியம்புபா தகனுமாம்இவ் வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப்பற்றி டாமல்அருள்வாய் சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத் திறன்அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ தேசிக சிகாரத்னமே தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி சண்முகத் தெய்வமணியே