காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன் கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள் வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில் வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம் ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம் அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அதிசய மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்