காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத் தூய்நின்றே நாளைத்தொழுதாடித் துன்பம்எலாம் போய்நின் நடைவேனோ புண்ணியநின் பொன்னருளே