காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே நாரண தலமே() நாரண வலமே நாரணா காரத்தின் ஞாங்கர்ப் பூரண ஒளிசெய் பூரண சிவமே பொதுநடம் புரிகின்ற பொருளே () தரமே - முதற்பதிப்பு பொ சு, ஆ பா -------------------------------------------------------------------------------- ஆனந்தானுபவம் நேரிசை வெண்பா
காரண காரியக் கல்விகள் எல்லாம் கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப் பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமு தாம்அருட் போனகம் தந்தே ஆரண வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே