காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர் யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன் பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப் பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே