குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோ ன் வழியில் சென்றிடவா யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக் கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே