குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே