கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும் பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில் ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- ஆன்ம விசாரத் தழுங்கல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்