கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே