கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக் குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம் ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன் ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச் சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே டீயஉம -------------------------------------------------------------------------------- வீரராகவர் போற்றிப் பஞ்சகம் திருஎவ்வுளூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்