கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண் பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின் இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச் சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே