சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம் சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே