சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே