சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப் புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே