சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச் சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே