சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர் சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர் கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர் கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர் சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர் சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர் என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர் எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த் தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்