சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி ஈதல் இரக்கம் என்அளவும் இல்லா தலையும் என்றனைநீ ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக் காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே எனக்கும் உனக்கும்