சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே
சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள் ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய் சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய் சுகமி லாதநீ தூரநில் இன்றேல் ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே