சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும் பூரணா எனஉல கெல்லாம் தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த தூயபேர் உதவிக்கு நான்என் ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம் அப்பநின் சுதந்தரம் அன்றோ