சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற் கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம் சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல் சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய் நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அனுபோக நிலயம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்