சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய் பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய் தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித் தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்