பாடல் எண் :4648
சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே
பாடல் எண் :4739
சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே
பாடல் எண் :5113
சிற்சபை அப்பனை உற்றே னே
சித்திஎ லாம்செயப் பெற்றே னே