பாடல் எண் :629
சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
தேவனே தில்லைஅம் பலத்தே
தற்பர நடஞ்செய் தாணுவே அகில
சராசர காரணப் பொருளே
அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
அலைதரு கின்றனன் எளியேன்
கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
களிப்புடன் ஆடுவ தென்றோ
பாடல் எண் :2221
சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே
பாடல் எண் :4553
சிற்பர மாம்பரஞ் ஸோதி - அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஸோதி
தற்பர தத்துவ ஸோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஸோதி சிவசிவ