சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித் தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய் நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே