சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச் சுத்தசித் தாந்தரா சியத்தைத் தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச் சமரச சத்தியப் பொருளைச் சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில் தெளிந்தபே ரானந்தத் தெளிவை வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின் மெய்மையைக் கண்டுகொண் டேனே
சுத்தவே தாந்த மவுனமோ அலது சுத்தசித் தாந்தரா சியமோ நித்தநா தாந்த நிலைஅனு பவமோ நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ புத்தமு தனைய சமரசத் ததுவோ பொருள்இயல் அறிந்திலம் எனவே அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே