சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல் ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான் பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே