சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும் சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக் கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக் கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன் ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே